திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன்(36), வி.கல்லுப்பட்டி யை சேர்ந்த வீரபத்திரன்(34) ஆகிய 2 பேர் தொடர்ந்து கஞ்சா மது பாட்டில்களில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர்.
இவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதால் ,இவர்கள் மீது திண்டுக்கல் நகர் தெற்கு ,நகர் வடக்கு, தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவளி பிரியா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து தாலுகா போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா