திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சாகுல் ஹமீது பாதுஷா (33). முஹம்மது ஹுசைன் (27). ராசப்பா (36). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள இவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், வினோத் சாந்தாராம், (கிழக்கு) பரிந்துரைத்தார். இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப, உத்தரவின் பேரில் மூவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (30.01.2026) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















