திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் முழு ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ள நிலையில் கொரோனா தொற்றை தடுக்கவும் பொதுமக்களிடத்தில் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்கள். மேலும் மாவட்டத்தில் யாரேனும் ரௌடிசத்தில் ஈடுபட்டாலோ, சட்ட விரோதமாக மணல் கடத்தல், சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, மற்றும் லாட்டரி விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டாலோ, கள்ளச்சாராயம், ஊறல், எரிச்சாராயம் ஆகியவற்றை விற்பனை செய்யும் செயல்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
மேலும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது மற்றும் காவலர் நலனில் முழு அக்கரை செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் விரைந்தும், துரிதமாகவும் இருக்கும். மாவட்டகாவல்கண்காணிப்பாளர்அவர்கள்தெரிவித்துள்ளார்கள். பொதுமக்கள் சட்ட விரோத செயல்கள் தொடர்பாக ஹலோ போலீஸ் எண். (8300087700) மற்றும் Dial. 100 ஆகிய எண்களுக்கு உடன் தகவல் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா