இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலைய குற்ற எண். u/s 5 L, J (ii) & 6 of POCSO Act என்ற குற்ற வழக்கின் எதிரி கோகுல பிரபு (25), த/பெ பாலசுப்புரமணியன் S.காரைக்குடி என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி கீழத்தூவல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தீபா அவர்கள் 12.02.2020-ம் தேதி மேற்படி கோகுல பிரபு என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தர்ராஜபட்டிணத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை குடும்பப் பிரச்சினை காரணமாக, 25.06.2016-ம் தேதி ராஜ்குமாரின் மனைவி ஜீவாவின் சகோதரர் உமாபதி என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இது தொடர்பாக ராஜ்குமாரின் மனைவி ஜீவா கொடுத்த புகாரின்பேரில், பரமக்குடி காவல் நிலைய குற்ற எண். u/s 302 IPC-ன் கீழ் வழக்கு பதிவு செய்து உமாபதியை கைது செய்தனர்..
இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று 12.02.2020-ம் தேதி பரமக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.மலர் மன்னன் அவர்கள் மேற்படி எதிரியான உமாபதி என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் 3,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்