திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் தூத்துக்குடி மாவட்டம், கலியாவூர், வடக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் சிவநாராயணன் (23). சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் சீவலப்பேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் மீது கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர், வேல்கனி (பொறுப்பு) குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், சிவ நாராயணன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் (26.01.2025) அன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்