செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உட்கோட்டம் மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கீழ்கண்ட நபர்களை, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ. கண்ணன் அவர்களின் உத்தரவின்படி, வண்டலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் மறைமலை நகர் காவல் ஆய்வாளர் திரு. செல்வம் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளன எழில் என்கிற எழிலரசன், பூச்சி என்கிற ரத்தினம் என்கிற ரத்தின சபாபதி, விமல், குட்டி என்கிற முருகன் என்கிற ராகவேந்திரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் அவர்களின் பரிந்துரையின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ஜான்லூயிஸ் இ.ஆ.ப அவர்களின் உத்தரவின் படி மேற்குறிப்பிட்ட குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் நேற்று முன்தினம் 01.03.2020 புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.