தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில், முக்கிய தலைவரின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரித்து வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்த 16 வயது மதிக்கதக்க இளைஞர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது மதிக்கதக்க இளைஞர் ஜாதி அடிப்படையிலுள்ள முக்கிய தலைவரின், தவறான முறையில் உருமாற்றம் (Morphing) செய்யப்பட்ட புகைப்படங்களை வெளிநாட்டிலிருந்து முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெற்று தனது வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலமாக பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக கோவில்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொப்பம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மேற்படி 16 வயது மதிக்கதக்க இளைஞரை விசாரணை செய்து கைது செய்தனர்.
இது போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை ஆடியோ, புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது போன்ற குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.