திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அனுமதி சீட்டு பெற்று கம்பி வேலிகளுக்குள் நின்று பார்த்து விட்டு வரும்படி வனத்துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் குணா குகை பார்ப்பதற்காக சென்ற கிருஷ்ணகிரி பையூரை சேர்ந்த பரத், விஜய், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேர் கம்பி வேலியைத் தாண்டி ஆபத்தான பகுதிக்கு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அங்கு வந்த வனத்துறையினர் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்து 3 பேரையும் வன பாதுகாப்பு சட்டம் வன உயிரின பாதுகாப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா