சென்னை : சென்னை தலைமை செயலகத்தில்,மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘குட்டி காவலர்’ திட்டத்தை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், துவக்கி வைத்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி அரியபட்டு, நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து நன்கு கண்டறிந்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். இந்த சிறப்பான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், தலைமையில் கோவை கொடிசியா வர்த்தக மையத்தில் 5000 மாணவர்களும், பல்வேறு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி ”ஆசியா புக் ஆப் ரெகார்ட்ஸ்” சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. அதற்கான சான்றிதழ் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. முன்னதாக 3 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த கையேட்டினை முதல்வர் வெளியிட்டார்.