திண்டுக்கல்: திண்டுக்கல் பஞ்சம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்த ஆறுமுகம்(40), மோகன்(39) ஆகிய 2 பேரை சின்னாளப்பட்டி காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் சார்பு ஆய்வாளர் திரு. அழகுபாண்டி மற்றும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1500 பாக்கெட் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா