கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் கருமத்தம்பட்டி பொள்ளாச்சி வால்பாறை ஆகிய 2 உட்கோட்டங்கள் உள்ள ஊர்களில் தடை செய்யப்பட்ட புகையிலை (குட்கா ) விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு திரு.அருளரசு உத்தரவின் பேரில் போலீசார் நேற்று கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது குட்கா போதைப் பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக 27 வியாபாரிகள் செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 300 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது மேலும் சோதனை நடந்து வருகிறது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்