திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முழுவதும் பான்மசாலா மற்றும் குட்கா புகையிலை பொருட்களை அடியோடு ஒழிக்கும் பொருட்டு காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு அமைத்து பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ளபெட்டிக்கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றை தொடர் ஆய்வு மேற்கொண்டும், மேற்கண்ட கடைகளில் சட்ட விரோதமாக பான்மசாலா மற்றும் குட்கா புகையிலைபொருட்ளை விற்பனை செய்பவர்களையும் அவர்கள் விற்பனை செய்யும் இடத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி, தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது1.திருத்துறைப்பூண்டி, தண்டலைச்சேரியில் அமைந்துள்ள பாரதிதாசன் உறுப்பு கல்லூரியின் அருகில் உள்ள காளிமுத்து மற்றும் ரகு ஆகியோர்களின் பெட்டிக்கடைகளிலும்,2. திருத்துறைப்பூண்டி புனித தெரசா மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள ரமேஷ்குமார் என்பவரின் பெட்டிக்கடையிலும்,3.புதியபேருந்து நிலையம் அருகிலுள்ள பாபு பிரசாத் என்பவரின் பெட்டிக்கடையிலும் அரசால்தடைசெய்யப்பட்ட பான்மசாலா, கூல்லிப் மற்றும் குட்கா புகையிலை பொருட்களை விற்பனைசெய்வது மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை தெரிந்தே மேற்படி நபர்களின் கடைகளில் விற்பனை செய்வதை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை விதிமுறைகளை மீறி அரசால் டைசெய்யப்பட்ட பான்மசலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு 30 கடைகளை அடைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பான்மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வரை நடவடிக்கை தொடரும் எனவும், மேலும் சம்மந்தப்பட்ட பெட்டிக்கடைக்காரர்களை நேரில் அழைத்து, சட்ட விரோதமான முறையில் பான்மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்ட பின்பும் மீண்டும் சட்டவிதிமுறைகளை மீறி மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய பான்மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு அவர்கள் மீது குண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர் *திரு. S.ஜெயக்குமார், M.Sc(Agri).,* அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.