திருவாரூர் : மன்னார்குடி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மளிகை கடைகளை சோதனை செய்த போது பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த – தாஜூதீன் (63), த/பெ.சர்புதீன், தெற்கு தெரு, உத்தமதானபுரம், வலங்கைமான் மற்றும் தீஷ் (40).த/பெ. சிவபிரகாசம், புதுத்தெரு, மன்னார்குடி என்பவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார். மேற்கண்ட நபர்கள் கடந்தி வந்த சுமார் 11 கிலோ (மதிப்பு ரூ.16,500) தடைசெய்யப்பட்ட குட்கா, கூலிப், பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்து, தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.