குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.இரா.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பக்கோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போது தும்பக்கோடு பகுதியை சேர்ந்த கேசவன் குட்டி என்பவரின் மனைவி சைலா 70. என்பவரிடமிருந்து 2.700 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.