திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட – சுரேஷ் (வயது-25). த.பெ.ராமலிங்கம், மெயின் ரோடு, ஆதனூர் மண்டபம் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் மேற்கண்ட நபர் மீது 3 வழக்குகள் உள்ளதாலும், மேலும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி இன்று (16.10.2025) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.