விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ.கா.பா., அவர்களின் உத்தரவின் படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் குட்கா மற்றும் புகையிலை வஸ்துக்கள் விற்பனை தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம், செஞ்சி ஆகிய உட்கோட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மாவட்டத்தில் பல இடங்களில் இன்று சிறு மற்றும்
குறு வியாபாரிகளை ஒன்றிணைத்து குட்கா மற்றும் புகையிலை வஸ்துக்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தும், ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டது *