கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.சங்கர் மற்றும் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பிள்ளைகொத்தூர் பகுதியில் கார் ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது. காரை போலீசார் திறந்து சோதனை செய்தனர். அதில் 370 கிலோ C இருந்தன. போலீசார் விசாரணை நடத்தியபோது அவை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததும் போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது.போலீசார் குட்கா மற்றும் மதுபாட்டில்கள் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.