கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டோல்கேட் அருகில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாவுக்குப் பிரிவு ஆய்வாளர் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹1,72,190/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து குட்கா பொருட்கள், வாகனம் பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையம் கொண்டு வந்து கிருஷ்ணகிரி அமலாக்க பிரிவு ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்