கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டோல்கேட் அருகில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹3,38,700/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து குட்கா பொருட்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்