கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சவுளுர் கூட்ரோடு கீதா பிரைமரி பள்ளி அருகே உள்ள ராதா என்பவருக்கு சொந்தமான வாடகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 1,00,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.