தஞ்சை : தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹேண்ட்ஸ், குட்கா பான்மசாலா போன்ற போதை பொருட்கள் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இப்போதை தரும் பொருள்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்பவர்களை கண்டு பிடித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பாபநாசம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி பூரணி அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர்கள் திரு முத்துக்குமார் மற்றும் திரு ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர் பிரபு , காவலர் விஜயகுமார் பிரபாகர் சந்தோஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் ,அய்யம்பேட்டை புறப்பகுதியான பசு பதிகோவில் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருள்கள் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது .
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் மேற்படி வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டார்கள். சோதனையில் அங்கு (40 மூட்டைகளில்) சுமார் 200 கிலோ குட்கா , பான்மசாலா போதை தரும் பொருள்கள் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து, அங்கு இருந்த அய்யம்பேட்டையை சேர்ந்த இளையபாண்டியன் மகன் செல்வராஜ் (61). பசுபதிகோவில் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் நந்தகுமார் (எ) துரை (60). மற்றும் இதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் சங்கர் (41). ஆகிய மூவரையும் கைது செய்து அவர்கள், வைத்திருந்த நாற்பது மூட்டை போதை பொருள்கள் மற்றும் இவ்வியாபாரத்திற்கு பயன்படுத்தி வந்த ஆட்டோ ஒன்றும் மற்றும் மூன்று செல்போன்கள் ஆகியவற்றையும் கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இன்று (23-9-2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதியரசர் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் மூவரையும் சிறையில் அடைத்தார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்