சேலம் : குட்கா புகையிலை விற்ற 60 கடைகளுக்கு சீல். சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்ற 60 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதில் 30 கடைகளுக்கு இதில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடைகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்