திருவள்ளூர்: தமிழகத்தில் குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து குட்கா புகையிலை கடத்தி வரப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது .இதில் ஈடுபடும் நபர்களை போலுசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும் குட்கா கடத்தல் தொடர்ந்து நீடித்து வருவதால் போலீசுக்கு சவாலாக இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குட்கா புகையிலை பெருமளவில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து பழவேற்காடு கடல் மார்க்கமாக படகில் குட்கா கடத்தி வருவதாக ஆவடி காவல் ஆணையர் திரு. சங்கர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அவரது உத்தரவின் பேரில் செங்குன்றம் சரக காவல் துணை ஆணையர் திரு..பாலகிருஷ்ணன் தலைமையில் திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. சிவக்குமார் மற்றும் போலீசார் பழவேற்க்காடு பகுதியில் ரகசியமாக மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று பழவேற்காடு கூனங்குப்பம் கடற்கரை பகுதியில் ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக தகவல் கிடைக்கவே அங்கு தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்த படகுகளை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது .42.கிலோ போதைப் பொருட்களையும் படகு மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
குட்கா பொருட்களை கடத்தி வந்த திருப்பதி பகுதியில் வட்டம்பேடு ஒரே கிராமத்தை சேர்ந்த சந்திரன்.54. உலகநாதன் .46. குப்பையா 43 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்தில் கொண்டுவந்து விசாரணை செய்ததில் அவர்களிடம் ரொக்க பணம் 91 ஆயிரத்து 360 ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் விசாரணையில் ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டையில் இருந்து மொத்தமாக குட்கா மற்றும்ம புகையிலை வாங்கி பழவேற்காடு கடல்மார்க்கமாக படகிவா கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது .மேலும் இந்த குட்கா கடத்தலில் யார் யார் தொடர்பு இருக்கிறார்கள் என போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றன.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு