நாமக்கல்: தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை தடுப்பு தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநில இணை செயலாளர் பத்ரி நாராயணன், சேலம் ஸ்டோர்ஸ் ஜெகதீசன் மற்றும் மாவட்டத்தில் இருந்து மளிகை வியாபாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்த முக்கிய தகவல்கள்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிக அதிக அளவில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் சோதனையின் போது கைப்பற்றப் பட்டன.
தடையை மீறி, சட்டத்திற்கு புறம்பாக குட்கா பொருட்களை விற்பனை செய்வோர் நாளை 27/07/2021 மாலைக்குள் தங்களிடம் உள்ள இருப்பினை மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கலாம். அப்படி ஒப்படைக்கும் நபர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மன்னிக்கப்படுவார்கள்.
நாளைய மறுநாள் முதல் காவல்துறையினரின் சோதனை மிகத் தீவிரமாக இருக்கும். அதில் பிடிபடும் வியாபாரிகளின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும்.
நாமக்கல் மாவட்டத்தை குட்கா இல்லாத மாவட்டமாக மாற்றிட வணிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.