கோவை: கோவைமாநகர காவல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையர் உத்தரவின் பேரில் காந்திபுரம் பகுதி சில்லரை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகளை அழைத்து குட்கா விற்பனை முழுவதும் தடை விதிக்கப்பட்டது.
சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது. மத்திய சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் சதீஷ் குமார் தலைமையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சிவானந்தா காலனி கிளை தலைவர் தீனதயாளன் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் லதா ,
உதவி ஆய்வாளர் வெள்ளிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குட்கா விற்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மேலும் தடைவிதிக்கப்பட்ட குட்கா விற்றால் , காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் கடை சீல் வைக்கப்படும் என்பதனையும் விளக்கி கூறினார்கள்.