திருவாரூர்: குடவாசல் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த – கும்பகோணம், பம்பைப்படையூர், வன்னியர் தெருவை சேர்ந்த ஹாஜா கமாலுதீன் என்பவரின் மகன் நைனா முஹம்மது (வயது-58). என்பவர் கைது செய்யப்பட்டார். மேற்படி நபர் விற்பனைக்காக கடத்தி வந்த ரூபாய்.12,300/- மதிப்பிலான 13 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) 1.Hans – 240, 2.Coollip – 120, 3.V1 Tobacco – 6000, 4.Vimal Panmasala – 180 பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம்-01 பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து, தடைசெய்யப்பட்ட புகையிலை (குட்கா) பறிமுதல் செய்த குடவாசல் காவல் ஆய்வாளர் திரு.ராஜ் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.