சேலம்: ஓமலூர் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது மினி லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டபோது,
கம்பளி போர்வை மூட்டைகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து மினி லாரியை பறிமுதல் செய்து அதில் இருந்த சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் பான்பராக் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்திய முகமது அப்துல் சலீம் மற்றும் திலிப் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்