கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு. கார்த்திக் நேற்று இரவு அங்குள்ள கே .கே .புதூர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார்.
அவர் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட புகையிலை (குட்கா) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை கடத்தி வந்த கே. கே ‘புதூர் காளியண்ணன் வீதியை சேர்ந்த பெரியசாமி ( வயது 34 ) கைது செய்யப்பட்டார்.
331 பாக்கெட் குட்காவும் , பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.