கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ காவல் நிலைய பகுதியில் சூரிய நாராயணன் என்பவர் ஓசூர் சந்திரசேகரா மருத்துவமனையில் PRO வாக வேலை செய்து வருவதாகவும் ஓசூர் To அவலப்பள்ளி ரோடு சில்க்பார்ம் அருகில் இந்தியன் பெட்ரோல் பங்க் எதிரே மருத்துவமனைக்கு சொந்தமான குடோன் உள்ளதாகவும் மருத்துவமனைக்கு சொந்தமான தேவையில்லாத பொருட்களை போட்டு வைத்துள்ளதாகவும் (02.10.2023) ஆம் தேதி இரவு சுமார் 01.30 மணிக்கு குடோனில் இருந்த SS ஸ்டில் படிக்கட்டுகள்-3,MS ஸ்டில் ஆங்கில் -1 ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக சூரிய நாராயணன் அட்கோ காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குடோனில் திருடிய இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்