தேனி : தேனி மாவட்டம் வீரபாண்டி காவலர் சமுதாய மண்டபத்தில் ,காவல் துணை கண்காணிப்பாளர்கள், (பெண்)காவல் ஆய்வாளர், (பெண்) சார்பு ஆய்வாளர் மற்றும் (பெண்)காவல் ஆளிநர்கள், ஆகியோர்களுக்கு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்-(2005) குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தலைமையேற்று தொடங்கிவைத்து பேசிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் குற்றவியல் கோட்பாட்டில் உடைந்த கண்ணாடி என்று ஒரு கோட்பாடு உள்ளது. ஒரு பெரிய மாளிகையில் உள்ள ஒரு ஜன்னலின் கண்ணாடி உடைந்து இருக்கும், அதனை பார்க்கும் அனைவருக்கும் சிறியதாக உடைந்த கண்ணாடியை மேலும் பெரிதாக்கிவிடுவர். அதே போன்று சிறிய பிரச்சினைகள் ஏற்படும் பொழுது அதனை விரைந்து தீர்க்க வேண்டும் இல்லையெனில் அது பெரிதாகி விடும். ஒவ்வொரு காவல் துறையினரும் 3 கோட்பாடுகளை கையில் எடுக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களுக்கு வரும் பிரச்சினைகளை விரைந்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும்,பிரச்சனை நடைபெறும் இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும், தவறு செய்பவர்களுக்கு விரைவாக தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும், தண்டனைகளை விகிதாச்சார முறைப்படி வழங்க வேண்டும் என்று கூறினார். இப்பயிற்சி முகாமில் தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.P.K.ராஜேந்திரன்(ADSP-HQ), திரு.K.M.சங்கரன்(ADSP-CWC), சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் செல்வி.பழனி, ஆரோக்கியம் அகம் பெண்கள் முன்னேற்ற திட்ட மேலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி