அரியலூர் : அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெரியநாகலூர் வடக்கு தெருவை சேர்ந்த பாரதிராஜா மனைவி மின்னல்கொடி, என்பவர் மனு அளித்திருந்த நிலையில் இக்கட்டான சூழ்நிலையிலும் காவல்துறையினர் பெண்கள் நலன் கருதி நேரடியாக சென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் நலன் விசாரித்தும் காவல்துறையினர் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தற்போது தனது கணவருடன் சந்தோசமாகா இருப்பதாகவும், தனது கணவருக்கு காவல் ஆய்வாளர்களின் ஆலோசனையின்படி குடிப்பழக்கத்தில் இருந்தவரை திருச்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததில் தற்போது தனது கணவர் குடிப்பழக்கத்தை மறந்தும், தன்னை நல்லமுறையில் பார்த்து கொள்கிறார் என்றும், தற்போது எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருவதாகவும், பொருளாதார அடிப்படையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும், தாங்கள் வந்து விசாரித்ததில் மிகுந்த பாதுகாப்பினை உணர்வதாகவும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்கள்.
பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற வழக்கில் வாதியான தனம் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் தனக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனை இருப்பதாக தெரிவித்தவருக்கு 28/04/2020 அன்று மாலை நேரடியாக சென்று பொறியாளர் சங்கத்தின் மூலம் பெறப்பட்ட நிவாரண பொருட்களை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. சுமதி அவர்கள் கொடுத்து உதவி செய்துள்ளார்கள்.