சென்னை : தாம்பரம் காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி பெரும்பாக்கம் கண்ணகி நகர் உள்ளிட்ட புறநகர் பகுதியில், போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து காவல் உதவி ஆணையர் திரு.ரியா சுதீன், மேற்பார்வையில் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு நடராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.வெங்கடேசன், காவலர்கள் திரு.அருண்குமார், திரு.நாகராஜன், திரு.கௌதம். கொண்ட தனிப்படை அமைத்து அதிரடி கண்காணிப்பில் இருந்தனர்.
இந்நிலையில் பெரும்பாக்கம் தமிழ்நாடு மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில், மனோராம் (50), என்பவர் மொத்த போதைப்பொருள் விற்பனையில், இருந்து வந்தது தேடுதல் வேட்டையில் தெரியவந்தது. இதை அறிந்த தனிப்படையினர் மாறுவேடத்தில் சென்று அந்த வியாபாரியை தொடர்பு கொண்டு போதைப்பொருள் வேண்டும் என்றும் அதற்கான செலவு கேட்டும் அவர் கைபேசியில் கூறிய இடத்திற்கு தனிப்படையினர் மாறுவேடத்தில் நடித்து அவரை தந்திரமாக பிடித்தனர். அவரிடம் இருந்த போதைப் பொருட்கள் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.