கோவை : கோவை மாவட்டம், ஆழியார் அணையில் குதிக்கும் நோக்கத்தில் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து அலுவலில் இருந்த தலைமைக்காவலர் திரு.பிரபு அவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு விசாரணை செய்ததில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்பதும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு மனவிரக்தியில் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கபட்டு வரவழைத்து அறிவுரை வழங்கி நல்ல முறையில் ஒப்படைத்தனர். தனது கணவரை பத்திரமாக மீட்டு கொடுத்த தலைமைக்காவலருக்கு கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்து சென்றனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்