75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பூவிருந்த மல்லி சாலையில் அமைந்துள்ள ரோமா பாராடைஸ் குடியிருப்புவாசிகள் சேர்ந்து சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வெள்ள வேடு காவல் ஆய்வாளர் திருமதி.சோபா தேவி தலைமை தாங்கினார்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் (அரசியல் பிரிவு) திரு.துக்காராம் பிள்ளை முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர் திருமதி.சோபா தேவி தேசிய கொடி ஏற்றினார், இதனைத்தொடர்ந்து தேசிய கொடிக்கு குடியிருப்புவாசிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காவல் ஆய்வாளர் திருமதி.சோபா தேவி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. காவல் ஆய்வாளர் திருமதி.சோபா தேவி அவர்கள் சுதந்திர தின உரை வழங்கி, குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினார்.