திருப்பத்தூர்: குடியரசு தினவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திருமதி .க.சி வ சௌந்திரவல்லி, IAS., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதனையடுத்து சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
















