மதுரை : குடிபோதையில் உறவினரை கல்லால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாடிப்பட்டி தாலுகா வாவிடமருதூரை சேர்ந்தவர் ஆண்டி மகன் சங்கர் 34 இவரது உறவினர்கள் தனசேகர் 46 யுவராஜ் 30 மற்றும் சடையாண்டி 48 இவர்கள் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் சம்பவத்தன்று இவர்கள் மூவரும் குடித்துவிட்டு வந்து உள்ளனர். அப்போது சங்கர் அங்கு வந்து அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சங்கரை திட்டி கல்லாலும் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனசேகர் 46 யுவராஜா 30 ரவி 48 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி