கோவை : கோவை மாநகர சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி சுப்ரமணிய நகர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் அருணாசலம்( 70).இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் பிரகாஷ் ( 29 ) .கடந்த 10ஆம் தேதி பிரகாஷ் குடித்துவிட்டு வந்து மீண்டும் குடிப்பதற்காக தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் குடிப்பதற்கு பணம் தர மாட்டேன் என்று அருணாசலம் மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து குடிபோதையில் இருந்த பிரகாஷ் தனது தந்தை என்று பாராமல் தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறிய அருணாச்சலம் கீழே விழுந்து தலையில் அடிபட்டு உடன் மயக்க நிலைக்கு சென்று உள்ளார் .அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர் சுயநினைவின்றி இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சரவணம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அருணாச்சலம் இறந்ததைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டு பிரகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்