தஞ்சாவூர் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் 32-வது தேசிய பாதுகாப்பு மாத விழா கும்பகோணத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 18-1-2021 முதல் 17-2-2021 வரை நடைபெறும். இவ்விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக நெற்று (21-1-2021) தலைகவசம் உயிர் கவசம் என்ற அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வுக்காக இருசக்கர மோட்டார் வாகன பேரணி பட்டிஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சன்னதி தெருவில் நெற்று நடைபெற்றது
இவ்விழாவில் கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன. RTO -திரு ஜெய்சங்கர் அவர்கள் தலைமை ஏற்று துவங்கி வைத்தார்கள் போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. செந்தாமரை, கும்பகோணம் தாழுக்கா காவல் நிலைய ஆய்வாளர் திரு .கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தார்கள் இதனை தொடர்ந்து சாலை மாத பாதுகாப்பு பேரணியில் தலைகவச அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கி தலைகவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் காவல்துறையினர் மற்றும் ஒட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்