இராமநாதபுரம்: கீழக்கரை சின்னக் கடைத் தெருவை சேர்ந்தவர். இவர் 15 நாட்களுக்கு முன் வெளிநாடு சென்று வந்துள்ளார். அதிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலோடு இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். உடல்நிலை மிகவும் மோசமானதால் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கொரானா பரிசோதனை இறப்பதற்கு முன் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் உடனடியாக இறந்து போனதால் கொரானாவில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியாததால், அவரை நல்லடக்கம் செய்ய சொந்த ஊரான கீழக்கரைக்கு மருத்துவமனை அனுமதியோடு கீழக்கரை எடுத்து வந்துவிட்டனர்.
அடக்கம் செய்து ஒரு நாள் கழித்து இன்று கொரானா பரிசோதனையில் இறந்தவருக்கு கொரானா பாதிப்புஉறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது, முன்னதாக அவரது இறுதி சடங்கில் அவர் உடல் குளிப்பாட்ட பட்டு 300க்கும் மேற்பட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்று உள்ளதால், இதனால் மாவட்ட நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அங்கு யாரெல்லாம் இறுதி சடங்கில் பங்கேற்றர்களோ அனைவரும் பரிசோதனை உள்ளாக்கப்பட வேண்டும். இதனால் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்