தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவுபடி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. லோகேஸ்வரன் தலைமையில் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. இளவரசு, உதவி ஆய்வாளர் திரு. சண்முகவேல், தனிப்பிரிவு காவலர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் குளத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. பிரபாகரன் ஆகியோர் அடங்கிய போலீசார் (03.10.2022) சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லாக்குளம் பகுதியில் ரோந்து மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த TN 69 AD 2630 (Bolero Pickup Van) மற்றும் TN 48 BY 3753 (Eicher Van) என்ற 2 சரக்கு வாகனங்களை சோதனை செய்ததில் அதில் கஞ்சா மற்றும் மண்ணெண்ணெய் இருப்பதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் அந்த சரக்கு வாகனங்களில் 18 மூட்டைகளில் இருந்த 460 கிலோ கஞ்சா, 6 கேன்களில் இருந்த 240 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. லோகேஸ்வரன் அவர்களிடம் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.