தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்களின் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அரிகண்ணன், மற்றும் போலீசார் (08.10.2022), கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி வ.உ.சி நகர் பகுதியில் உள்ள கோவில்பட்டி ராமசாமி நகரை சேர்ந்த கோட்டைசாமி மகன் செண்பகராஜ் (52), என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி செண்பகராஜை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 20,000/- மதிப்பிலான 25 கிலோ புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.