கோவை : கோவை விமான நிலையத்திற்கு கிடைத்த திடீர் தகவல்களின் பேரில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்வது வழக்கமாகி வருகிறது. இப்படி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த 6 பயணிகளை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது தங்க செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (32), என்ற பயணி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கின்கீழ் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
