போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில், ஏழை மக்களுக்கு சமூக நல உதவி வழங்கும் நிகழ்வு சென்னை விநாயகபுரம் பகுதியில் நடைபெற்றது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை சேர்ந்த போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள் திரு. அசோக் குமார் மற்றும் திரு. ராஜ்குமார் பிரதர் ஆகியோர் இந்த சமூக நலப் பணியில் ஈடுபட்டனர்.
புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மாலை, விநாயகபுரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சமோசா, கேக் மற்றும் மிக்சர் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், சமப்பிரண ஆசிரமம் நடத்தும் நிர்வாக தலைவர் திருமதி.பவானி ஸ்ரீதர் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

நியூஸ் மீடியா அசோசியேஷன் இந்தியா சார்பில், “இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வோம்” என்ற மனிதநேய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சேவை பாராட்டுக்குரியது.
















