ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் துவங்கி ஈஸ்டர் தினம் வரை 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கிறார்கள். தவக்காலத்தின் துவக்க நாளாகிய நேற்று சாம்பல் புதன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி மதுரையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் காலையிலும் மாலையிலும் சிறப்பு திருப்பலி மற்றும் சாம்பல் பதன் வழிபாடு நடைபெற்றது.
மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி வாடிப்பட்டி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் திருப்பலி நிறைவேற்றி தவக்காலத்தை துவங்கி வைத்தார்.
ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருள் சேகர், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அமல்ராஜ், பாஸ்டின் நகர் புனித பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், மற்றும் அண்ணா நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் காலை 6:00 மணிக்கும் மாலை 6:00 மணிக்கும் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டின் போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை துவங்கி வைத்தார்.
ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு தொடங்கி ஏப்ரல் 20 ஈஸ்டர் வரை புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்தின் இரண்டாம் நிகழ்வாக 17ஆம் தேதி வியாழக்கிழமை அன்று இயேசு கிறிஸ்து 12 சீடர்களின் பாதங்களை கழுவுவதை நினைவு கூறும் வகையில் அந்தந்த ஆலயங்களில் உள்ள 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவருடைய பாதங்களை பங்குத்தந்தை கழுவி முத்தமிடும் நிகழ்வு நடைபெறுகிறது. புனித வெள்ளி அதனைத் தொடர்ந்து ஈஸ்டர் தினத்தோடு தவக்காலத்தின் நிறைவு செய்கிறார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஆண்டனி வினோத்
மதுரை