கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் IPS அவர்களின் மேற்பார்வையில், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. காந்திமதி அவர்களின் தலைமையில், காவலர்கள் மற்றும்
“OPERATION SMILE” குழுவினருடன் இணைந்து கிருஷ்ணகிரி பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனரா என்பதை பரிசோதனை செய்தும், இனிவரும் காலங்களில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது என அறிவுரைகள் வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
“OPERATION SMILE” (புன்னகையை தேடி) என்ற சிறப்பு குழு மூலமாக குழந்தை தொழிலாளர்கள், காணாமல் போன குழந்தைகள், சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள் மற்றும் யாசகம் கேட்கும் குழந்தைகளை மீட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுத்து மறுவாழ்வு அளிப்பதே இதன் நோக்கமாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நாட்களில் பல்வேறு பகுதிகளில் கடைகளில் வேலை செய்து கொண்டிருந்த 17 குழந்தை தொழிலாளர்களை மீட்டு குழந்தைகளின் பெற்றோரை அழைத்து பள்ளியில் சேர்க்க அறிவுரை கூறி குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைத்தனர்.இச்செயல் ஓசூர் பொது மக்களுக்கு நல்லது செய்ய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்