கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே தீர்த்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.திரு.சாய் சரண் தேஜஸ்வி.அவர்களின் உத்தரவை அடுத்து வேப்பனப்பள்ளி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீர்த்தம் பகுதிக்கு விரைந்து அங்கு வீட்டில் பதுக்கி கஞ்சா விற்பனை செய்திருந்த 7 பெண்கள் 1 ஆண் என எட்டுப்பேரிடம் இருந்து 4000 ரூபாய் ரொக்க பணமும், விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை, பறிமுதல் செய்து எட்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனார்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்