கடலூர் : கடலூர் விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த லூகாஸ் வயது (45), என்பவர் பேருந்தை சுத்தம் செய்யும்போது 1 சவரன் தங்க நகையை நகராட்சி கவுன்சிலர் ராஜ்குமார் உடன் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.ஆரோக்கியராஜ், அவர்களிடம் ஒப்படைத்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் தங்க செயினை தொலைத்தவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் வயது (43) என்பவர் என தெரிந்ததால் அவரை வரவழைத்து தங்க செயினை அவர்களிடம் எடுத்து கொடுத்த லூகாஸ் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது. லூகாஸ் அவர்களின் நேர்மையை காவல்துறையினர் பாராட்டினார்கள்.