சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம் தம்மம்பட்டி காவல் நிலைய எல்லை உலிபுரம் கிராமம் நரிக்கரடு பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் சொக்கநாதபுரம் நியாய விலை கடையில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வருவதாகவும் அவரது மனைவி அமுதா(42), என்பவர் வீட்டில் இருந்து வந்ததாகவும் அமுதாவின் மாமனார் பழனி (65), என்பவர் அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகவும் கடந்த (17 /2 /2019) ஆம் தேதி மதியம் தனது மகன் அறிவழகன் வீட்டில் இல்லாத போது பழனி தனது மருமகள் அமுதாவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த போது அமுத சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வந்தவுடன் கோபம் அடைந்த பழனி, கோடரியால் அமுதாவை வெட்டி சம்பவ இடத்திலேயே அமுதா இறந்துள்ளார்.
இது தொடர்பாக தம்மம்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் அரசு கூடுதல் வழக்கறிஞர் திரு.சக்திவேல் ,அவர்களால் குற்றவாளியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று நீதிபதி திரு ரவி அவர்களால் மேற்கண்ட குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விழித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்