இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நடமாடும் நூலகம் வாகனம் மூலம் கிராமப் பகுதிகளுக்கு (02.05.2023) முதல் செல்ல உள்ளன. இதன் மூலம் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக புத்தகங்கள் படிப்பதற்கும் மேலும் மாணவ, மாணவிகள் பொது அறிவுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், தொழில்த்துறை தொடர்பான வழிகாட்டி
கையேடுகளை படித்து தெரிந்து கொள்ளவும் மற்றும் பழம்பெருமையையும், பண்பாட்டையும்
அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புகளை தெரிந்து கொள்ளவும், பெண்களின் சுய
முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கை வளர்க்கவும், தேவையான நூல்களைப் படித்து அறிந்து
கொள்ளவும் மற்றும் கவிதை தொகுப்புகள் கவிதை கட்டுரைகள் போன்ற சிறப்பு வாய்ந்த
புத்தகங்கள் இந்த நடமாடும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நடமாடும் நூலகம் செல்லும் பகுதிகளில் மாணவ, மாணவிகள்
வாகனத்திலேயே அமர்ந்து படிக்கும் வகையிலும் குழுவாக மாணவ, மாணவிகள்
கருந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில்
2500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் மாணவ,
மாணவிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நூலகம் உங்களைத் தேடி வருகிறது. மேலும்
விவரங்களுக்கு 8610173901, 7010838609, 9894065655 என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம். நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி அறிவுத்திறனை
மேம்படுத்தவும் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தவும் பயனுள்ள வகையில் ஒவ்வொருவரும்
பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி