திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் திருமதி.சிவசௌந்தரவல்லி,இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் (05.11.2025) திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் நாடு மலைப்பகுதியில் மலை கிராம மக்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாட்டுப்புற கலைகள் பேச்சுப் போட்டி, நடன போட்டி, கட்டுரை போட்டி போன்ற போட்டிகளில் மூலமாக மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வில் பொது மக்களுக்கு POCSO, குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இணையவழி குற்றம், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள், விதிமீறல்கள் அவசர உதவி எண்கள் 100,181, 1098 ,1930 Kaaval udhavi App, இயற்கை வளங்களை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் திரு.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன், சிறப்பு அரசு வழக்கறிஞர் திருப்பத்தூர் அமர்வு நீதிமன்றம் திரு.சுந்தரமூர்த்தி, மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை காவல் கண்காணிப்பாளர் திரு.குமரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
















